KGF-2 இனி ஹவுஸ்ஃபுல் ஆவது கஷ்டம்தானாம்- ஏன் தெரியுமா?!
நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியாகி 2ஆவது வாரம் தொடங்கியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியானது கேஜிஎஃப்-2. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் - இந்தியா ரிலீஸாக வெளியான இப்படம் வசூலில் இமாலய சாதனைகளைப் படைத்துவருகிறது.
முந்தைய பல சாதனைகளை இப்படம் தகர்த்தெறிந்துவரும் நிலையில், இப்படத்துக்கான தியேட்டர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கேஜிஎஃப்-2 ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்னதாக வெளியானது. தமிழகத்தைப் பொறுத்தவரை பீஸ்ட் படம் சுமார் 850 தியேட்டர்களில் வெளியானது.
பெரிய நடிகரின் படம் எனும் காரணத்தால் மினிமம் கியாரண்டியை அடிப்படையாக வைத்து தியேட்டர்ஸ் உரிமையாளர்கள் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. இதனால் நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப்-2 திரைப்படத்துக்கு சுமார் 250 தியேட்டர்கள் மட்டுமே தமிழகத்தில் கிடைத்தன.
கேஜிஎஃப்- 2 ஒருபுறம் தொடர்ந்து வசூல் குவித்துவரும் நிலையில் மறுபுறமோ குறைவான தியேட்டர்களில் வெளியானதால் பல பகுதிகளில் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்காத சூழலும் இருந்துவந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கேஜிஎஃப்-2 படத்துக்கான தியேட்டர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. திரை ரசிகர்களுக்கு இருந்துவந்த டிக்கெட் பிரச்சனை இதனால் சற்று ஓய்ந்துள்ளது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்தோட ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இதுதானாம்!
அந்த வகையில் கேஜிஎஃப்- 2 தற்போது கூடுதலாக சுமார் 200 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. படம் வெளியாகி 2ஆவது வாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் இப்படத்துக்கான எண்ணிக்கை தற்போது 450+ தியேட்டர்களாக அதிகரித்துள்ளது. வெளியான 4ஆவது நாளிலேயே 500 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுள்ள கேஜிஎஃப்-2- விரைவில் 1000 கோடி ரூபாய் இலக்கை எட்டும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR