நடிகை ஷோபனாவுக்கு கொரோனா தொற்று
பிரபல நடிகை ஷோபனாவுக்கு கொரோனா பாதிப்பில் சிக்கி உள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. இந்த பெருந்தொற்றானது பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி மக்களை அச்சத்தி வருகின்றது. அதன்படி இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது.
முதல் அலையில் இந்த எண்ணிக்கையை எட்ட 120 நாட்கள் ஆனது. இரண்டாவது அலையில் இந்த எண்னிக்கை 50 நாட்களில் எட்டப்பட்டது. தற்போது வெறும் 10 நாட்களில் ஒரு லட்சம் ஒரு நாள் கொரோனா (Corona virus) எண்ணிக்கையை நாம் கடந்து விட்டோம்.
ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான்
இதற்கிடையில் தமிழகத்தில் (TN Corona Update) கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதன்படி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்கள், இதனால் சில மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதிப்பு அடைய சினிமா துறையில் நிறைய பிரபலங்களும் கொரோனா நோய் தொற்றில் சிக்கிவிடுகிறார்கள். அதன்படி கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். அதேபோல் நடிகர் அருண் விஜய், நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினர், நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி நேற்று நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை ஷோபனாவுக்கு (Actress Shobana) கொரோனா பாதிப்பில் சிக்கி உள்ளார். அவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டதால் தனக்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR