நடிகர் அஜித் சினிமாவைக் கடந்து தனக்கு பிடித்த விஷயங்களை மிகவும் அக்கறை செலுத்துபவர். பைக் ரேஸரான அவர், விமானம் ஓட்டுவதிலும், டிரோன்கள் வடிவமைப்பதிலும் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நிபுணராக இருக்கிறார். கார் ரேஸிங்கிலும் ஈடுபடக்கூடிய அஜித், ரைபிள் பயிற்சி பெற்று தேசிய ரைபிள் சுடும் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தினார். பல்துறை வித்தகராக மாறியிருக்கும் அஜித், தற்போது எடுத்திருக்கும் அவதாரம் உலகம் சுற்றும் வாலிபன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஆம், பைக் மூலம் உலகத்தை சுற்றிக் கொண்டு இருக்கிறார். இந்தியா முழுவதும் பைக் சுற்றுலா முடித்த அவர், தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்து சென்ற அவர், நண்பர்களுடன் முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது லண்டனில் ஒரு கார் அருகில் எடுத்த புகைப்படம் வைரலானது. அஜித்துக்காக அந்தப் புகைப்படம் வைரலானது என்றாலும், அஜித் ஏன் குறிப்பாக அந்தக் காரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்தார்? அந்த காரில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது? என நெட்டிசன்கள் தேடத் தொடங்கினர். 


மேலும் படிக்க | ’நான் பெரிய உத்தமி இல்லை’ ஜாலியாக பேசும் விக்ரம் நடிகை


அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள மெக்லரேன் என்கிற ஆடம்பர கார் ஷோரூமில் தான் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். கார் மீது பிரியம் இருப்பதால், அந்த பிரபலமான கார் ஷோரூமுக்கு சென்ற நடிகர் அஜித், அங்கிருந்த பிரபலமான மற்றும் ஆடம்பர கார்களை பார்வையிட்டுள்ளார். அப்போது, அவர் ஒரு காரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தக் காரின் விலை மட்டும் சுமார் 5 கோடி ரூபாயாம். பல லேட்டஸ்ட் அம்சங்களைக் கொண்ட அந்தக் காருக்கு பணக்காரர்கள் மத்தியில் மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறதாம். 



தன்னுடைய விருப்பப் பட்டியலில் அந்தக் கார் இருப்பதாலேயே, அந்த காரின் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம். இந்தப் பயணத்தை முடித்தவுடன் இந்தியா திரும்பும் அஜித்குமார் ஏகே 61 படத்தின் இறுதிக் கட்டப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR