விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் நடைபெற்றது.  அதன்பின் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்றது.  பீஸ்ட் படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  விரைவில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினி, கமல் திரைப்படங்கள்!


விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.  இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.  முதல் முறையாக நேரடியாக ஒரு தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில் விஜய் 66 படத்தின் கதை இணையத்தில் வெளியாகியுள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 



இந்தப்படத்தில் விஜய் ஒரு மனநோயாளியாக நடிக்கிறார் என்றும் அந்த பாதிப்பிலிருந்து எப்படி வெளி வருகிறார் என்பதே படத்தின் ஒன் லைன் ஆக கூறப்படுகிறது.  ஏற்கனவே வம்சி இயக்கிய தோழா படத்தில் நாகார்ஜூனா பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடித்திருந்தார்.  இந்த படத்தில் விஜய்யும் ஒரு மனநோயாளியாக காட்டப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.  இதுமட்டுமின்றி படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் நிறைய இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  தனது வழக்கமான நடிப்பை விட்டு புதிய கதாபாத்திரங்களை விஜய் ஏற்று நடித்து வருகிறார்.  மாஸ்டர் படத்தில் ஒரு குடிகார வாத்தியாராக நடித்திருந்தார்.  அதன் காரணமாக விஜய் 66 கதையும் இதுவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விஜய் விஜய்யின் 66 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


ALSO READ விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR