விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் விரைவில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 05:48 PM IST
விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!  title=

13 வருடங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்று அந்நிறுவனத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது.  விஜயின் நடிப்பில் வெளியான குருவி திரைப்படம் உதயநிதி தயாரித்த முதல் திரைப்படம் ஆகும்.  அதன் பிறகு சூர்யா நடித்த ஆதவன், கமல்ஹாசன் நடித்த மன்மதன் அன்பு, ஏ.ஆர். முருகதாஸ்ஸின் ஏழாம் அறிவு போன்ற படங்களை தயாரித்தார்.  மேலும் பல படங்களை விநியோகம் செய்தார் உதயநிதி. 

ALSO READ 46 வயதில் தாயான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!

உதயநிதி ஸ்டாலினும், விஜய்யும் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு இணைந்து படங்கள் பண்ண வில்லை என்றாலும் இருவருக்கும் இடையே உள்ள நட்பு வளர்ந்து கொண்டே இருந்தது.  சில பொது நிகழ்ச்சிகளிலும் தங்களது நட்பை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.  தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு இருவரும் இணைந்து புதிய படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

vijay

2007ஆம் ஆண்டு விஜய்தான் உதயநிதியை படங்களை தயாரிக்க சொன்னதாகவும் அதன் பின்பே ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உதயநிதி ஆரம்பித்தார் என்றும் கூறப்படுகிறது.  தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  உதயநிதி ஸ்டாலின் இதனை அன்போடு ஏற்றுக் கொண்டுள்ளார்.  தற்போது இதற்கான கதையையும், இயக்குனர்களையும் தேடி வருவதாகவும் இது விஜயின் 67 அல்லது 68வது படமாக இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. 

vj

நீண்ட நாட்களாக படம் தயாரிப்பதில் இருந்தும், விநியோகிப்பதில் இருந்தும் விலகி இருந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது அடுத்தது படங்களை வாங்கி வருகிறது.  சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் போடப்பட்டது.  ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்து இருந்தனர்.  மேலும், அரண்மனை 3 படத்தினையும் விநியோகித்து இருந்தனர்.  தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  அதன்பிறகு விஜயின் 66வது படமான வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.  இந்த படங்கள் முடிந்த பிறகு உதயநிதியுடன் விஜய் பண்ணும் படம் பற்றிய முழு தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

ALSO READ மீண்டும் ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News