சமீபத்தில், இயக்குநரும், நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க நகைகள் உள்ளிட்ட பல பொருள்கள் திருடுப்போனது. தொடர்ந்து, அவரின் வீட்டில் பணிபுரிந்த பணியாளர்கள் அதை திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைதானார்கள். இதை தொடர்ந்து, தற்போது தமிழ் நடிகை ஒருவரின் வீட்டிலும், அங்கு பணிபுரியும் பணியாளர்களே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொன்னியின் செல்வன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து, பரவலான கவனிப்பை பெற்றவர் வினோதினி. இவர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த திருட்டு சம்பவம் நடந்ததற்கான காரணம், சமூக சூழல், ஆகியவை குறித்தும் அவர் அதில் பதிவு செய்துள்ளார். 


அந்த பதிவில்,"சென்ற வாரம் என்னிடம் இருந்து 2 நபர்கள் மொத்தம் 25 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் காவல் துறையில் புகார் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். 



மேலும் படிக்க | இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள விலகலா..கிழக்கு வாசல் சீரியலில் டுவிஸ்ட்


ஒருவர் வீட்டு பெயிண்டர். மற்றொருவர் மெக்கானிக். தேவைக்காக பணம் திருடிவிட்டனர். சிசிடிவி ஆதாரம் இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்போது வாழாததாலும் மற்றொருவரும் ஒப்புக்கொண்டார். இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். குறிப்பாக, அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத் தெரியும். அந்த பெயின்டர் தனியாக project வாங்கியும், Urban Company என்ற பன்னாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைப் பார்க்கிறவர்.


சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். Lower to middle classஇல் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல கனவுகளோடு வாழ்வர். தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள். பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத்தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மாநில வரிகள், பண வீக்கம், பெட்ரோல் விலை வீக்கம், மின்சார விலை உயர்வு, தரமற்ற உணவு பொருள்கள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி, அதிக வட்டி விகிதம் என்று பொதுமக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற மெட்ரோவில் மாதம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதில், அதிக நேர வேலை, போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள், பன்னாட்டு நிறுவனங்களுடைய vendorகளாக வேலை செய்யும் delivery boys/ executives உடைய உழைப்பைச்சுரண்டி commission போக அவர்களுக்கு பிச்சைப்போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.


இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்போதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம்" என பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த சமூகப்பொறுப்புடன் கூடிய பதிவு முன்மாதிரியாக திகழ்ந்து, பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | தனிவிமானம்..வீடுகள்..கார்கள்..பிசினஸ்..தலைச்சுற்ற வைக்கும் நயன்தாரா சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ