தனிவிமானம்..வீடுகள்..கார்கள்..பிசினஸ்..தலைச்சுற்ற வைக்கும் நயன்தாரா சொத்து மதிப்பு

Nayanthara Net Worth: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்து மதிப்பு என்ன ? நடிப்பை தாண்டி அவர் வேறு என்ன பிசினஸ் செய்கிறார்? அவரிடம் வேறு என்னென்ன ஆடம்பர பொருள்கள் உள்ளன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்!  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Apr 21, 2023, 11:09 AM IST
  • தனியார் ஜெட் வைத்திருக்கும் நயன்.
  • நயன்தாராவுக்கு சென்னையில் ஒரு ஆடம்பர சொகுசு பங்களாவும் இருக்கிறதாம்.
  • கார்களின் மதிப்பு மட்டுமே 5 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
தனிவிமானம்..வீடுகள்..கார்கள்..பிசினஸ்..தலைச்சுற்ற வைக்கும் நயன்தாரா சொத்து மதிப்பு title=

2003 ஆம் ஆண்டு வெளிவந்த மனசினக்கரே என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் நயன்தாராவுக்கு தமிழில் மிகப் பெரிய இடத்தை பெற்று தந்தது.பின்னர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 80 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. மேலும் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானோடு ஜவான் என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் entry கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் கதாநாயகிகளில் நயன்தாராவுக்கு தான் முதலிடம். இப்படியாக கோடிகளில் டீல் செய்யும் நயன்தாரா பல கோடிகளில் சில ஆடம்பர சொத்துக்களையும் வைத்திருக்கிறார். மொத்தமாக சேர்த்து அவரிடம் 200 கோடிகளுக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது

தனியார் ஜெட் வைத்திருக்கும் நயன்
வேலை நிமித்தமாக நயன்தாரா அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் தனியார் ஜெட் விமானம் ஒன்றை வைத்து இருக்கிறாராம். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவிடம் தான் தனியார் ஜெட் விமானம் இருக்கிறதாம் . இந்த விமானத்தை மும்பை கொச்சின் ஹைதராபாத் போன்ற ஊர்களுக்கு செல்ல விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள விலகலா..கிழக்கு வாசல் சீரியலில் டுவிஸ்ட்

நயன்தாராவின் சொந்த வீடுகள்
நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளோடு தனது வீட்டில் தான் நேரத்தை செலவிடுவாராம். அதற்காக சென்னையில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதாம் அதுபோக கேரளா ஹைதராபாத் மும்பை போன்ற இடங்களில் பங்களாக்களும் இருக்கிறதாம். இவை தவிர நயன்தாராவுக்கு சென்னையில் ஒரு ஆடம்பர சொகுசு பங்களாவும் இருக்கிறதாம்.

நயன்தாராவின் சொகுசு கார்கள்
நடிகை நயன்தாரா BMW, Benz போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். அதன்படி அவரிடம் BMW 5s சீரிஸ் உள்ளது. ஒரு Mercedes GLS 350 D, ஃபோர்டு எண்டெவர், ஒரு BMW 7 சீரிஸ், இன்னோவா கிரிஸ்ட்டா. அவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மட்டுமே 5 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

அழகு சாதன பொருட்கள் விற்பனையில் நயன்
நடிகை நயன்தாரா கடந்த 2021 ஆம் ஆண்டு தனது பிசினஸ் பார்ட்னர் ரேனிட்டா என்பவருடன் சேர்ந்து the lip balm company யை உருவாக்கினார். இந்த நிறுவனம் தற்போது 100க்கும் மேற்பட்ட lip balm களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அழகு சாதன பொருட்கள் வரிசையில் இந்த நிறுவனம் அசைக்க முடியாத நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.இவை தவிர chai wala என்ற நிறுவனத்திலும் ஒரு சிறு பங்குதாரராக இருக்கிறார் நயன்.

தயாரிப்பாளராகவும் நயன்
நடிகை நயன்தாரா நடிகையாக மட்டுமில்லாமல் பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார் அவர் தனது கணவரோடு சேர்ந்து the rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல வெற்றி படங்களையும் தயாரித்திருக்கிறது. இந்த கம்பெனியின் நிகர மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | திரைப்படமாகும் வைரமுத்துவின் இந்த அற்புத நாவல்..வாவ் இவர்தான் ஹீரோவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News