கொரோனா அலை கட்டுக்குள் வந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில்,  ஏராளமான படங்கள் OTTயிலும் வெளியாகி வருகின்றன.  இந்நிலையில், இந்த வாரம் OTT தளத்தில் 8 படங்கள் வெளியாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

*நேற்று ஹாட்ஸ்டார் OTT தளத்தில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ஓமன பெண்ணே படம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான பெல்லி சூபுளு படத்தின் தழுவல் ஆகும்.


*அமேசான் ப்ரைம் OTT  தளத்தில் ரோஹித் பட்கி இயக்கத்தில் ரெபா மோனிகா தனன்ஜெய் நடிப்பில் ரத்னன் பிரபாஞ்சா படம் வெளியாகி உள்ளது.  


ALSO READ 5 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'செல்லம்மா' பாடல்!


*சேகர் கம்முலா இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான லவ் ஸ்டோரி  படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று Aha OTT தளத்தில் வெளியாகி உள்ளது.


*சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் தயாரான பேய் மாமா திரைப்படம் டென்ட் கொட்டா ஓட்டிட்டு தளத்தில் வெளியாகி உள்ளது.


*போனி சென்குப்தா நடிப்பில் வெளியாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான எப்ஐஆர் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் நேற்று Zee5 OTT தளத்தில் வெளியாகி உள்ளது.


*எஸ் எஸ் ராஜு இயக்கத்தில் தேஜா சஜ்ஜா பிரியா வாரியர் நடிப்பில் காதல் நாட் லவ் ஸ்டோரி சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.


*சுனில் மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் சாய் கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் தயாரான தெலுங்கு படமான Heads & Tales  Zee5 தளத்தில் வெளியாகி உள்ளது.


*விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி. ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று லாபத்தை ஈட்டாமல் சென்றது.  
இந்நிலையில், இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது.  


*விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி வெற்றி அடைந்த கோடியில் ஒருவன் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகிறது.


ALSO READ கோர்ட்ல நீதி கிடைக்கலைனா ரோட்ல எறங்கி போராடுவேன்! வெளியானது ஜெய் பீம் ட்ரைலர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR