ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் திரையரங்குகளில் வெளியான பல படங்கள் சில நாட்களிலேயே ஓடிடி தளங்களிலும் வெளியாகி வருகின்றன. அது மட்டுமன்றி, சில படங்களும் தொடர்களும் நேரடியாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பல தளங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன. அவற்றில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் வெளியாகின்றன. அந்த வகையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பல படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன..? அவற்றை எந்தெந்த தளத்தில் பார்க்கலாம்..? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அநீதி:


தமிழ் சினிமா ரசிகைகளின் தற்போதைய க்ரஷ் மெட்டீரியலாக இருப்பவர் அர்ஜுன் தாஸ். இவர் பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்து கட்டை குரலில் பேசி பல இளம் பெண்களின் நெஞ்சகளை கொள்ளை கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அநீதி. இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் தற்போது ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அநீதி படத்தை நாளை முதல் (செப்., 15) ஆன்லைனில் பார்க்கலாம். 


மை 3: 


தமிழ் திரையுலகின் காமெடி பட இயக்குநராக விளங்குபவர், ராஜேஷ். இவர் ஹன்சிகாவை வைத்து ஒரு கல் ஒரு கண்னாடி படத்தை இயக்கியுள்ளார். அடுத்து அவர் ஹன்சிகாவுடன் கைக்கோர்த்துள்ள தமிழ் தொடர், மை 3. இந்த தொடரில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முகேன் ராவ் நடிக்கிறார். பாக்கியராஜ் இதில் மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் (செப்டம்பர் 15) காணலாம். 


டை நோ சர்ஸ்:


புதிதான கதைக்களத்துடன் தமிழ் சினிமாவி வெளியான படங்களுள் ஒன்று, டை நோ சர்ஸ் (Die No Sirs) இந்த படத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா உள்ளிட்ட பலர் ஹீரோவாக நடித்துள்ளார். இதை எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ளார். இதில் நடித்துள்ளவர்களில் இருந்து இயக்கியவர்கள் வரை அனைவருமே சினிமாவிற்கு புதிதாக வந்தவர்கள். படம் வெளியான போது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. இந்த படம் சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை வெளியாகிறது. 


மேலும் படிக்க | ஷக்திக்கு சவால் விடும் பூஜா... நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!


போலா ஷங்கர்:


தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம், வேதாளம். இந்த படம் தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதில், தெலுங்கு திரையுலக ரசிகர்களால் ‘மெகா ஸ்டார்’ என்று புகழப்படும் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், தமன்னா, வம்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர். இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது. 


18 ப்ளஸ்:


நஸ்லென் கே.கபூர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம், ஜர்னி ஆஃப் லவ் 18+. இதனை அருண் டி. ஜோஸ் இயக்கியுள்ளார்.  இந்த படம், ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. நகைச்சுவை, காதல் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். இந்த படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை முதல் காணலாம். 


பிற படங்கள்:


மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, பல மொழிகளின் படங்களும் தொடர்களும் நாளை ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன..? லிஸ்ட் இதோ...


>ராமபானம்-தெலுங்கு-நெட்ஃப்ளிக்ஸ்
>டிஜிட்டல் வில்லேஜ்-மலையாளம்-அமேசான் ப்ரைம்
>காலா-இந்தி-டிஸ்னி ஹாட்ஸ்டார்
>ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கஹானி-இந்தி-அமேசான் ப்ரைம்
>ஒன்ஸ் அப்பான் அ க்ரைம்-ஜப்பானிய மொழி-நெட்ஃப்ளிக்ஸ்
>லவ் அட் ஃபர்ஸ் சைட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>தர்ஸ்டேஸ் விடோஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>மிஸ்ஸர்ஸ் எஜுகேஷன்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்


மேலும் படிக்க | பாசமிகு அண்ணா கொடுக்கும் ஷாக்! ரத்னாவை தூக்க வந்த ரவுடிகளுக்கு அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ