இந்தியாவில் ஓடிடி தளங்கள் கண்டுள்ள வளர்ச்சியால், பல புதுப்புது படைப்புகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ரிலீஸான ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைந்த நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஒரு சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் (This Week OTT Releases) வெளியாக உள்ள படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவான்: Jawan OTT Release


ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம், ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார். நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஜவான் படம், உலகளவில் ரூ.1,000 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. கிரைம்-ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. 


ரத்தம்: Raththam OTT Release


விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் (October) திரையரங்குகளில் வெளியான படம், ரத்தம். இந்த படத்தில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்ய நம்பீசன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிரைம்-த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருந்தது. இந்த படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். திரையரங்குகளில் வெளியான போது இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்திருந்தனர். இந்த படம், அமேசான் பிரைம் தளத்தில் நாளை (நவம்பர் 3) வெளியாக உள்ளது. த்ரில்லர் படங்களை பிடித்த ரசிகர்களுக்கு இந்த படமும் பிடிக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘இறுகப்பற்று’ படம் ஓடிடியில் ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..?


தமிழ் குடிமகன்: Tamil Kudimagan OTT Release


இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம், தமிழ் குடிமகன். இந்த படத்தில் சேரன், ஸ்ரீ பிரியங்கா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சாதிய ரீதியான கதையை கொண்ட இப்படம், சமூகத்தில் நிலவும் சாதிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டியுள்ளதாக விமர்சனங்கள் வந்தது. படம், ஆழமான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தினை நாளை (நவம்பர் 6) முதல் ஆஹா தமிழ் தளத்தில் பார்க்கலாம். 



ஆர் யு ஓகே பேபி: Are You Ok Baby OTT Release


லக்ஷமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் ஈர்த்த படம் ‘ஆர் யு ஓகே பேபி’. இதில் சமுத்திரகனி, அபிராமி, லக்ஷமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் கதை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இப்படத்தினை ‘ஆஹா’ தளத்தில நாளை முதல் பார்க்கலாம். 


பிற ஓடிடி வெளியீடுகள்:


மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி இன்னும் பல தொடர்களும் படங்களும் வெவ்வேறு ஓடிடி தளங்களில் நாளை (நவம்பர் 3) வெளியாக உள்ளன. 


>ஸ்கந்தா-தெலுங்கு-ஹாட்ஸ்டார்
>மேட்-தெலுங்கு-நெட்ஃப்ளிக்ஸ்
>மந்த் ஆஃப் மது-தெலுங்கு-ஆஹா
>பிஐமீனா-இந்தி தொடர்-பிரைம் 
>ஸ்லை-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>லாக்ட் இன்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>ஆர்யா சீசன் 3-இந்தி தொடர்-ஹாட்ஸ்டார்
>இன்சிடியஸ் தி ரெட் டோர்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்


மேலும் படிக்க | 2026 தேர்தலில் போட்டியிடும் விஜய்? லியோ வெற்றி விழாவில் அவரே சாென்ன பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ