டிடி ரிட்டர்ன்ஸ் to இன்ஃபினிட்டி-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை எப்படி பார்ப்பது?
This Week OTT Releases Tamil Movies: இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் என்னென்ன? அவற்றை எந்தெந்த தளத்தில் பார்க்கலாம்? முழு விவரம்..!
ஓடிடி வெளியீடுகள்: வார இறுதியில் குடும்பத்தினருடன் கிளம்பி சென்று திரையரங்களில் படம் பார்க்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால், பல படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியாவதால் மக்கள் வீட்டில் அமர்ந்தபடியே படங்களை பார்த்து வருகின்றனர். இந்தியாவில் ஜீ 5, டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஜியோ சினிமா, அமேசான் ப்ரைம் போன்ற பல ஓடிடி தளங்கள் பிரபலமானவையாக விளங்குகின்றன. இந்த தளங்களில் அடிக்கடி பல படங்களும் தொடர்களும் வெளியாகி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த தளங்களில் எந்தெந்த படங்களையும் தொடர்களையும் பார்க்கலாம்..? இதோ முழு விவரம்.
டிடி ரிட்டர்ன்ஸ்:
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளவர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான படம், டிடி ரிட்டர்ன்ஸ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சுர்பி நடித்திருந்தார். இந்த படம், ஜீ 5 தளத்தில் நாளை (செப்டம்பர் 1) வெளியாகிறது. இந்த படத்தை நாளை முதல் காணலாம். பேய்-காமெடி த்ரில்லர் வடிவில் அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இதனை குடும்பமாக அமர்ந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | “நான் வந்துட்டேன்னு சொல்லு..” இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!
இன்ஃபினிட்டி:
நட்டி நடராஜன் நடிப்பில் ஜூலை மாதம் வெளியான படம், இன்ஃபினிட்டி. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றது. இதில், வித்யா பிரதீப், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை முதல் காணலாம்.
பாபா பிளாக் ஷீப்:
பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையிலும் அவர்கள் வாழ்வில் நடக்கும் கலாட்டாக்களையும் கூறிய படம், பாபா பிளாக் ஷீப், இதில், யூடியூப் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். பிரபல நடிகை அம்மு அபிராமி இதில் முக்கியமான கதாப்பாத்திரமாக வருகிறார். இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை (செப்., 1) பார்க்கலாம்.
ப்ராஜெக்ட் சி சாப்டர் 2:
தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள படங்களிலேயே புதுவிதமான பாணியில் வெளியாகியுள்ள ப்டம், பிரஜெக்ட் சி சாப்டர் 2. இந்த படத்த்ல், ஸ்ரீ, சாம்ஸ், வசுதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், நேரடியாக ராஜ் டிஜிட்டல் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
நல்ல நிலாவுல ராத்திரி:
மலையாள படங்களுக்கென்று தமிழ் நாட்டில் பல ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படம், நல்ல நிலாவுல ராத்திரி. இந்த படத்தில் செம்பன் வினோத் ஜோஸ், பின்னு பாப்பு, பாபுராஜ், கணபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
ஸ்கேம் 2003:
இந்தி மொழியில் வெளியாக உள்ள தொடர், ஸ்கேம் 2003. இதற்கு முன்னர் வெளியான ஸ்கேம் 1992 வெப் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. பணத்தை வைத்தும் அதன் மூலம் செய்யும் க்ரைம் செய்கைகளும்தான் இந்த தொடரின் கதை. இந்த தொடரை சோனி லிவ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
பிற படங்கள்:
மேற்கூறிய படங்கள் மட்டுமல்லாது இன்னும் சில படங்களும் ஓடிடி தளங்களில் வெளிவருகின்றன. அவை பின்வருமாறு..
>லவ்லி யுவர்ஸ் வேதா-மலையாளம்-ஹெச் ஆர் ஓடிடி
>நீரஜா-மலையாளம்-ஹெச் ஆர் ஓடிடி
>தி ஃப்ரீலான்சர்-இந்தி-ஹாட்ஸ்டார்
>பியே பிஹ்ராத்-பெங்காளி-ஜீ 5
>ஞானும் பின்னொரு ஞானும்-மலையாளம்-ஹெச் ஆர் ஓடிடி
>பொலைட் சொசைட்டி-ஆங்கிலம்-ஜியோ சினிமா
>பார்வாலி-பெங்காலி-ஹோய்ச்சாய்
>ஒன் பீஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>அ குட் பர்சன்-ஆங்கிலம்-ப்ரைம்
>ஃப்ரைடே நைட் ப்ளான்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>தி கிரேட் செடக்ஷன்-ஸ்பானிஷ்-நெட்ஃப்ளிக்ஸ்
>ஸ்வாட் சீசன் 6-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>ஆர் யூ தேர் காட் இட்ஸ் மீ மார்கரெட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
மேலும் படிக்க | Love Failure ஆகிடுச்சா..? ‘இந்த’ யுவன் பாடல்களை கேட்டுப்பாருங்கள்..மனசு லேசாகும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ