யோகி பாபு நடித்துள்ள தூக்குதுரை திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா நடித்துள்ள தூக்குதுரை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தூக்குதுரை. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தில் இனியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ரவிவர்மா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எஸ். மனோஜ் இசையமைக்க, தீபக் எஸ் துவாரக்நாத் எடிட்டிங் செய்துள்ளார்.
1990 காலகட்டத்தில் நடக்கும் விதத்தில் கதை ஆரம்பிக்கிறது. ஊர் தலைவராக இருக்கும் மாரிமுத்துவிற்கு திருவிழாக்களில் தலைப்பாகட்டி முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. அந்தக் குடும்பம் மற்றும் ஊரின் மரியாதை ஆக ஒரு தங்க கிரீடம் இருந்து வருகிறது. அதே ஊருக்கு திருவிழாவிற்கு படம் ஓட்ட வரும் யோகிபாபு, மாரிமுத்துவின் மகள் இனியாவை காதலித்து, கூட்டி கொண்டு ஓட முயற்சிக்கிறார். இந்த சமயத்தில் ஊர்காரர்கள் சேர்ந்து யோகி பாபுவை அடித்து, கொலை செய்து ஒரு கிணற்றில் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த சமயத்தில் அந்த கிரீடமும் அதே கிணற்றில் மாட்டிக் கொள்கிறது.
மறுபுறம் தற்போதைய காலகட்டத்தில் இந்த கிரீடத்தை பற்றி தெரிந்து கொள்ளும் பால சரவணன், மகேஷ் மற்றும் சென்ராயன் இந்த கிரீடத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். இவர்களின் தலைவனாக மொட்டை ராஜேந்திரன் உள்ளார். இறுதியில் அந்த கிரீடம் யாருக்கு கிடைத்தது? உண்மையில் யோகி பாபுவிற்கு என்ன ஆனது என்பதே தூக்குதுரை படத்தின் கதை. ஆரம்பத்தில் வரும் சில காட்சிகளில் யோகி பாபு தனது காமெடியால் ரசிக்க வைக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். மேலும் இரண்டாம் பாதியில் பேயாக வந்து பயமுறுத்தும் சில காட்சிகளும் நன்றாக இருந்தது.
பால சரவணன், சென்ராயன் மற்றும் மகேஷ் இடையே நடக்கும் காமெடிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. குறிப்பாக பால சரவணன் நிறைய இடங்களில் கைத்தட்டுகளை பெறுகிறார். படத்தின் ஆரம்பம் மற்றும் முடிவில் வரும் மொட்டை ராஜேந்திரன் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். தூக்குதுரை ஒரு காமெடி படமா அல்லது சீரியஸ் படமா எனும் முடிவிற்கு வருவதற்குள் படம் முடிந்து விடுகிறது. பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகளும் உள்ளன. கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் தான் செல்கிறது. டெக்னிக்கலாகவும் படம் நன்றாக இல்லை, ரவி வருமாவின் ஒளிப்பதிவும் இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம். காமெடி பேய் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு தூக்குதுரை பிடிக்க வாய்புள்ளது.
மேலும் படிக்க | மூன்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தம்! மாரியை மகளாக ஏற்று கொள்வாரா பார்வதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ