Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது

Padma Awards 2024: தங்களது துறையில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன... ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2024, 07:01 AM IST
  • 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு!
  • நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது
  • மொத்தம் 132 பேருக்கு விருது
Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது title=

நியூடெல்லி: கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்றவை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 132 பிரபலங்கள் மதிப்புமிக்க விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தங்களது துறையில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். 

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் பட்டியலில், வெங்கையா நாயுடு, நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவி, வைஜெயந்திமாலா உட்பட 132 பேர் இடம் பெற்றுள்ளனர்.  

அண்மையில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகராக இருந்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து குறிபிட்ட இடத்தைப் பிடித்த தேமுதிக. தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் அவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி காலாமானார்.

மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 132 விருதுகள் இடம் பெற்றுள்ளன. மேனாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் விஜயகாந்த், மெகா ஸ்டார் கொனிடேலா சிரஞ்சீவி மற்றும் பிரபல நடிகை வைஜெயந்திமாலா பாலி உள்ளிட்டோருக்கு, இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் மறைந்த பிந்தேஷ்வர் பதக் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது, நடிகரும், அரசியல்வாதியுமான மிதுன் சக்ரவர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் மற்றும் பாடகி உஷா உத்துப் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருது, கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் போன்ற பல்வேறு துறைகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 110 பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனது. 

இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் இந்திய குடியரசுத் தலைவர் விருது வழங்குவார். விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள் பிரிவில் எட்டு பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்! வெளியானது டீஸர்!

 பத்ம விபூஷன் விருதுகள் 2024 வென்றவர்களின் பட்டியல்

1. திருமதி வைஜெயந்திமாலா பாலி - கலை - தமிழ்நாடு

2. ஸ்ரீ கொனிடேலா சிரஞ்சீவி - கலை - ஆந்திரப் பிரதேசம்

3. ஸ்ரீ எம் வெங்கையா நாயுடு - பொது விவகாரங்கள் - ஆந்திரப் பிரதேசம்

4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) - சமூகப் பணி - பீகார்

5. திருமதி பத்மா சுப்ரமணியம் - கலை - தமிழ்நாடு

பத்ம பூஷன் விருதுகள் 2024

6. ஸ்ரீ விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - கலை - தமிழ்நாடு 

7. ஸ்ரீ ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் - கல்வி - பத்திரிகை மகாராஷ்டிரா

8. ஸ்ரீ மிதுன் சக்ரவர்த்தி - கலை - மேற்கு வங்காளம்

9. ஸ்ரீ சீதாராம் ஜிண்டால் - வர்த்தகம் மற்றும் தொழில் - கர்நாடகா

10. ஸ்ரீ யங் லியு - வர்த்தகம் மற்றும் தொழில் - தைவான்

11. ஸ்ரீ அஷ்வின் பாலசந்த். - மருத்துவம் - மகாராஷ்டிரா

12. ஸ்ரீ சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்) - பொது விவகாரங்கள் - மேற்கு வங்காளம்

13. ஸ்ரீ ராம் நாயக் பொது - விவகாரங்கள் - மகாராஷ்டிரா

14. ஸ்ரீ தேஜஸ் மதுசூதன் படேல் - மருத்துவம் - குஜராத்

15. ஸ்ரீ ஓலஞ்சேரி ராஜகோபால் - பொது விவகாரங்கள் - கேரளா

16. ஸ்ரீ தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் - கலை - மஹாராஷ்டிரா

17. ஸ்ரீ டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக்

18. ஸ்ரீ பியாரேலால் சர்மா - கலை - மகாராஷ்டிரா

19. ஸ்ரீ சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் - மருத்துவம் - பீகார்

20. திருமதி உஷா உதுப் - கலை - மேற்கு வங்காளம்

21. திருமதி எம் பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்) - பொது விவகாரங்கள் - கேரளா

22. ஸ்ரீ குந்தன் வியாஸ் இலக்கியம் மற்றும் கல்வி - பத்திரிகை - மகாராஷ்டிரா

மேலும் படிக்க | கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News