ஒரே வாரத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள்!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், அனபெல்லா சேதுபதி என மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியாக உள்ளது.
Vijay Sethupathi தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த பொங்கல் தினத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததிலிருந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சிறிய கதாபாத்திரம் தொடங்கி கதாநாயகன்,வில்லன் என எதுவாயினும் கதை பிடித்திருந்தால் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் தற்போது இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் நடித்து வருகிறார்.
வரும் செப்டம்பர் மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியாக உள்ளது. மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் திரைப்படம் செப்டம்பர் 9ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் என்று திடீர் அறிவிப்பு வெளிவந்தது. தொலைக்காட்சி வெளியான பின்பு ஓடிடியிலும் வெளியிடப்படுகிறது.
ALSO READ விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நான்கு படங்களின் அப்டேட்கள்!
செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவான அனபெல்லா சேதுபதி என்ற ஹாரர் படம் ஓடிடியில் வெளியாகிறது. இப்படம் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. மேலும் விஜய் சேதுபதி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்புக் காட்சி சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மூன்று பேரும் பேருந்தில் தொங்கியபடி செல்லும் அந்த காட்சி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டது.
நேற்று முதல் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ALSO READ சூர்யாவை தொடர்ந்து ஓடிடி ஹீரோவாகும் விஜய் சேதுபதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR