ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினோத்துக்கு என்னாச்சு என பலர் முணுமுணுக்க தொடங்கினார்கள். அதேசமயம் வலிமை படத்தில் பலரின் தலையீடு இருந்ததால் தான் நினைத்தபடி வினோத்தால் வலிமை படத்தை எடுக்க முடியவில்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால் துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.வாரிசும் பொங்கலுக்கு வெளிவருவதால் இந்தப் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறது. அதேபோல் வெளிநாட்டு விநியோக உரிமையை அஜித்தின் அடுத்தப் படத்தை தயாரிக்கவிருக்கும் லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



இதற்கிடையே துணிவு படத்தின் இசையமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்திருக்கின்றன. அதுதொடர்பாக ஹெச்.வினோத்துடன் ஜிப்ரான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்தச் சூழலில் துணிவு படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகரக்ளிடையே ஆவல் எழுந்திருக்கிறது. ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடலை அனிருத் பாட வைசாக் எழுதியிருக்கிறார். சில்லா சில்லா என்று அந்தப் பாடல் தொடங்கவிருக்கிறது.



இந்நிலையில் துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏகே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | உடல்நிலை எப்படி இருக்கிறது?... கமல் ஹாசன் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ