அரசியலில் தீவிரமாக இருந்த கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இவை தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதற்கிடையே அரசியல் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திகொண்டிருக்கிறார். இப்படி பயங்கர பிஸியாக இருக்கும் கமல் சமீபத்தில் ஹைதராபாத் சென்று இயக்குநர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து ஒரு நாளில் வீடு திரும்பினார். மேலும் இரண்டு நாள்கள் ஓய்வு எடுக்க அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | சம்பளத்தை உயர்த்திய சிம்பு! அடுத்தடுத்து 2 படங்கள் வெற்றியால் திடீர் முடிவு
இந்தச் சூழலில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அவரது உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படத்தின் ஷுட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ