Thunivu Varisu OTT Release: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு  ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. 


மேலும் படிக்க | Varisu Movie Review: வாரிசு படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்


வாரிசு படத்தின் சிறப்பு காட்சி நேற்றிரவு சென்னை சத்யம் சினிமாஸில் திரையடப்பட்டது. இதில், படக்குழுவினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 



மேலும், துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கியுள்ளதால் அந்த படத்தின் மீதான கருத்துகள் ட்விட்டரில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. 


இரு படங்களும் ஓடிடியில் அடுத்த மாதம் தான் வெளியாகும் என கூறப்படும் நிலையில், அவை வெளியாக உள்ள ஓடிடி தளங்கள் குறித்து தெரியவந்ததுள்ளது. வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவிலும், துணிவு திரைப்டம் நெட்பிளிக்ஸிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படத்தின் டைட்டில் கார்ட்டுகளில் போடப்பட்ட தகவல் மூலம் இது உறுதிசெய்யப்படுகிறது. 


மேலும் படிக்க | துணிவு vs வாரிசு LIVE Updates: தொடங்கியது துணிவு FDFS - வாரிசு சிறப்பு காட்சி விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ