TN Theater Open: திரையரங்கை நோக்கி படை எடுக்கும் புதிய படங்கள்!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்றுமுதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட படங்கள் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்றுமுதல் திரையரங்குகள் (Thearter) திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட படங்கள் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா (Corona) பாதிப்புக்கு பின் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. பின்பு தொற்று குறைந்த நிலையில் திறக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்கு மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் தினமும் இரண்டாயிரத்திற்கும் கம்மியான அளவில் தொற்று கண்டறியப்படுவதால் இன்று முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் படப்பிடிப்புகள் முடிந்து வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ள படங்கள் தங்களது வெளியீட்டு தேதி அறிவித்து வருகின்றனர்.
ALSO READ அடுத்த ஆண்டிற்கு செல்லும் கே.ஜி.எப் 2..! காரணம் இதுதான்!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் தலைவி (Thalaivi)படம் தனது வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன்(Kodiyil Oruvan), சுந்தர்சியின் அரண்மனை 3 (aranmanai 3), அருண் விஜய்யின் பார்டர்(Border), சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் (MGR Magan), ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமார் சபதம்(Sivakumarin sabadam), விக்ரம் பிரபுவின் டாடா காரன் (Tanakaran) போன்ற படங்கள் கூடிய விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளன.
மேலும் லிப்ட், கூகுள் குட்டப்பா, லாபம், மெமரிஸ்,முருங்கக்காய் சிப்ஸ், ஹாஸ்டல், குருதி ஆட்டம், ராக்கி, குதிரைவால் போன்ற படங்களும் படப்பிடிப்பு முடிந்து தயாராக உள்ளன. ஹர்பஜன் சிங், சதீஷ், லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் படம் U/A சான்றிதழ் வாங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் கேஜிஎப் 2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று நேற்று அப்படக்குழு அறிவித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe