வாரம்தோறும் வெள்ளிகிழமைகளில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் ஒரு பார்வை:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. நெருப்புடா


விக்ரம் பிரபு நடிப்பில், புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெருப்புடா’. இதில் நிக்கி கல்ராணி, வருண், ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.


சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ‘நெருப்புடா’ படத்திற்கு தணிக்கை குழுவால் 'யு' சான்றிதழ் கிடைத்தது.


2. கதாநாயகன்


விஷ்ணு விஷால், கேத்ரீனா தெரசா, சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை முருகானந்தம் இயக்கி வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷால் தயாரித்து இருக்கிறார். 


விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் இந்த ‘கதாநாயகன்’ படத்தின் ஒன்-நெனப்பு பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.


இந்த படங்களுடன் போட்டி கொடுக்கும் வகையில் 


3. தப்பு தண்டா
4. ஆறாம் வேற்றுமை
5. காதல் கசக்குதையா
6. மாய மோகினி, படங்களும் வெளியாகின்றன.


வெள்ளிதோறும் தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிகரிக்க வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் இந்த வாரம் இந்த 6 படங்கள் இடம்பெற்றுள்ளன.