1) த்ரிஷ்யம் - விஜய் என்கிற கேபிள் டிவி தொழிலதிபரை வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத சம்பவத்தை பற்றி கூறும் திரில்லர் படம் தான் த்ரிஷ்யம்.  தன் மகள் குளிப்பதை வீடியோ எடுத்துவைத்து மிரட்டி பிளாக்மெயில் செய்யும் இளைஞனை தற்காப்புக்காக மகள் கொன்றுவிட, அந்த கொலையை யாருக்கும் தெரியாமல் விஜய் மறுத்துவிடுகிறார்.  அந்த இளைஞன் உயர் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் போலீஸ் விசாரணை வலுக்கிறது.  போலீசார் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்கும்போது, ​​​​விஜய் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி போலீசாரை தந்திரமாக பேசி ஏமாற்றி தனது குடும்பத்தை காப்பற்ற போராடுகிறார்.  தனது குடும்பத்தின் பாதுகாப்பாக ஒரு குடும்ப தலைவர் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை இப்படம் காட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2) ராக்ஸ்டார் - ராக்ஸ்டார் என்பது பாலிவுட் படம் இசை சம்மந்தப்பட்ட கதையை மையமாக கொண்டது.  ஜனார்தன் ஜாகர் அல்லது ஜோர்டான் எனும் இளைஞன் ராக்ஸ்டார் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறான்.  அந்த இளைஞன் மிகவும் வசதியான, அழகான ஹீர் எனும் பெண்ணை காதலிக்கிறார், ஆனால் அந்த பெண் ஏற்கனவே நிச்சயமானவர்.  ஜனார்தன் தனது காதலியுடன் சேரும் முயற்சியில் தனது நீண்ட நாள் கனவை மறந்து, இறுதியில் மனவேதனை அடைகிறார்.  இந்த படம் ஒரு இளைஞனின் காதல் போராட்டத்தையும், கனவை நிறைவேற்ற துடிப்பதையும் மையமாக கொண்டு இருக்கின்றது.


மேலும் படிக்க | தலைவர் 171 திரைப்படம் குறித்த ரஜினியின் திட்டம்


3) அந்தாதுன் - இந்த படத்தில் ஆகாஷ் எனும் ஒரு பியானோ கலைஞர் சில காரணங்களுக்காக பார்வையற்றவராக நடிக்கிறார்.  அப்போது சோபி எனும் பெண் அவரது கணவரை கொலை செய்துவிட, அதனை ஆகாஷ் நேரில் பார்த்துவிடுகிறார்.  கொலையை நேரில் பார்த்த சாட்சியாக ஆகாஷ் சில சிக்கலில் சிக்கி கொள்கிறார், அந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து அவர் வெளியேற முயற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக அவர் நிஜமாகவே தனது பார்வையை இழந்துவிடுகிறார்.  இறுதியாக அந்த பியானோ கலைஞர் கொலைகார கும்பலிடமிருந்து எப்படி தனது உயிரை பாதுகாக்கிறார் என்றும், தனது குருட்டுத்தன்மையை எப்படி சமாளிக்கிறார் என்பதையும் இப்படம் காட்டுகிறது. 


4) ஸ்பெஷல் 26 - ஒரு கும்பல் தன்னை சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று போலியாகக் காட்டி கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் பணக்கார தொழிலதிபர்களின் சொத்துக்களை தந்திரமாக கொள்ளையடித்து வருகின்றனர்.  இந்த குற்ற சம்பவத்தை வாசிம் கான் என்ற உண்மையான சிபிஐ அதிகாரி விசாரிக்கத் தொடங்கும் வரை அந்த கும்பல் பல இடங்களில் தனது கைவரிசையை காட்டி வருகிறது.  இந்த குற்றத்தை களைய வாசிம் பல முயற்சிகளை எடுக்கிறார், இதனால் அந்த குழுவின் திருட்டு முயற்சி கடினமாகிவிடுகிறது.


5) இங்கிலிஷ் விங்கிலிஷ் - மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியான ஒரு நகைச்சுவை கலந்த திரைப்படம் தான் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்'.  ஆங்கிலத்தில் பேச தெரியாத, பெரிதளவில் உலக நடப்பு தெரியாத ஒரு அப்பாவியான இல்லத்தரசி அமெரிக்கா சென்று ஆங்கிலம் பேசுவதற்கு எப்படி போராடுகிறார் இறுதியில் தனது திறமையை எப்படி வெளிக்கொண்டு வந்தார் என்பதை இப்படம் காட்டுகிறது.


6) கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் - சர்தார் கான் எனும் இளைஞனை தொழிலதிபரும், அரசியல்வாதியும், மாஃபியா கும்பலை வழிநடத்தும் ரமாதிர் சிங் என்பவரை பழிவாங்க முயற்சி செய்கிறார்.  சர்தார் கான் தனது பழிவாங்கும் பயணத்தைத் தொடங்கும்போது, அவர் பெரிய ரவுடியாக மாறி பிரபலமாகி விடுகிறார்.  பின்னர் அவர் துர்கா எனும் பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார், அவரது குடும்பமும் பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறது.  சுருக்கமாக கூறினால் இப்படம் வசேபூரில் நடக்கும் குற்றங்களின் கொடூரத்தைக் காட்டுகிறது.


7) கஹானி - காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்க கொல்கத்தா செல்லும் வித்யா பாக்சி என்ற கர்ப்பிணிப் பெண்ணைப் பற்றிய ஒரு மர்ம திரில்லர் படம் தான் கஹானி.  தனது கணவருக்கு உண்மையில் என்ன ஆனது என்பதற்கான மர்ம முடிச்சை அவிழ்க்க போய், அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.  இறுதியில் கணவரை கண்டுபிடித்தாரா, தனது உயிரை காப்பாற்றி கொண்டாரா என்பதை இப்படம் காட்டுகிறது.


8) குயின் - தனது திருமண நாளுக்கு ஒரு நாள் முன்னதாக நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட ஒரு பெண்ணின் கதை தான் இந்த குயின் படம்.  அந்த பின்னர் அவர் முன்னர் தேனிலவுக்காக திட்டமிட்டிருந்த ஐரோப்பாவிற்கு தனியாக பயணம் செய்து அங்கு புதிய நபர்களை சந்திப்பதை, புதிய இடங்களுக்கு சென்று புதிய அனுபவங்கள், கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்துகொள்வது என தனது வாழ்க்கையை தனது பிடித்தாற்போல வாழ முயற்சிக்கிறார்.


9) மஞ்சி: தி மவுன்டெயின் மேன் - மனைவிக்காக மலையையே உடைத்த தஷ்ரத் மாஞ்சி என்பவற்றின் கதை தான் இந்த படம். மலையடிவாரத்தில் வசித்து வரும் தஷ்ரத் மாஞ்சி என்பவர் தனது உடல்நிலை சரியில்லாத மனைவியை மலையை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேரமாகி தனது மனைவியை இழக்கிறார்.  அதன் பின்னர் தனது இறந்துபோன அன்பு மனைவியின் நினைவாக வெறும் சுத்தியலையும், உளியையும் மட்டும் பயன்படுத்தி மலையை உடைத்து பாதையை சரிசெய்கிறார்.  மலைப்பாதையை தனி ஒருவனாக நின்று சரிசெய்ய தஷ்ரத் மாஞ்சிக்கு சுமார் 22 ஆண்டுகள் ஆனது.


10) என்ஹெச்10 - அர்ஜுன் மற்றும் மீரா என்ற தம்பதியினர் தங்களது காரில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் பயணம் செல்லும் வழியில் அப்பகுதியிலுள்ள சிலர் ஒரு ஜோடியை கொலை செய்வதை நேரில் பார்த்து பிரச்சனையில் சிக்கிக்கொள்கின்றனர்.  அந்த கொலைகார கும்பலிடமிருந்து தப்பிக்க அர்ஜுன்-மீரா தம்பதியினர் போராடுகின்றனர், பின்னர் அந்த கும்பல் ஒருவழியாக அர்ஜுனை கடுமையாக தம்பதிகள் காட்டின் நடுப்பகுதியில் சிக்கிக்கொள்கின்றனர்.  அதன் பிறகு மீரா தனது கணவருக்காக அந்த கொலைகார கும்பலை பழிவாங்ம் முயற்சியில் இறங்குகிறார்.


மேலும் படிக்க | கமலின் KH233 படத்திற்காக மாஸ்டர் பிளான் போட்ட இயக்குனர் ஹெச்.வினோத்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ