நெட்பிளிக்சில் உள்ள சிறந்த டாப் 5 வெப் சீரிஸ்கள்!
நெட்ப்ளிக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் நிகழ்ச்சிகளில் 5 வெளிநாட்டு வெப் சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது.
மணி ஹெய்ஸ்ட் :
மணி ஹெய்ஸ்ட் தொடரானது இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிபெற்று, உலகளவில் முதல் 10வது இடத்தை பெற்றது. இந்தத் தொடர், ஸ்பெயின் வரலாற்றில் மிகச் சரியான கொள்ளையைச் செய்ய முயலும் கொள்ளையர்களின் குழுவை பற்றி தெளிவாக காட்டியிருந்தது. இந்த தொடரின் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த க்ரைம் த்ரில்லர் தொடர் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்து திருப்தியளித்தது. இதில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தனது கதாபாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்காட்டினார்கள்.
மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் போஸ்ட்!
'ஸ்க்விட் கேம்ஸ்' சீசன் 2
ஹங்கர் கேம்ஸ் மூலம் ஓரளவு ஈர்க்கப்பட்டு , இந்த கொரியத் தொடர் தற்போது நெட்ஃபிக்ஸ் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக மாறியுள்ளது என்று கூறலாம். இந்த தொடர் பல்வேறு விருதுகளையும் வென்றதோடு, உலகளவில் உள்ள பார்வையாளர்களையும் திகைக்க வைத்தது. இந்த தொடரில் விளையாட்டிலிருந்து விலகுவதற்கு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் பலர் தொடர்ந்து விளையாட முடிவு செய்கிறார்கள். இந்த தொடர் பார்வையாளர்களுக்கு நல்ல த்ரில்லிங்கான அனுபவத்தை தரக்கூடியதாக அமைந்து இருந்தது, அதனாலேயே இந்த தொடர் சிறப்பான வெப் தொடராக கருதப்படுகிறது.
நர்கோஸ் :
பாப்லோ எஸ்கோபரின் எழுச்சி மற்றும் ஆட்சியை மிகவும் துல்லியமாக சித்தரித்த முதல் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமான திரைப்படத் தயாரிப்பின் கலவையாகும். முதலாவதாக, இது பிரேசிலிய இயக்குனர் மற்றும் பிரேசிலிய முன்னணி நடிகரைக் கொண்டு கொலம்பியாவில் படமாக்கப்பட்டது. இந்தத் தொடர் நெட்ப்ளிக்சில் சர்வதேச அளவில் வளர முயற்சித்து தற்போது வெற்றியும் பெற்றுள்ளது. இது ஒரு நல்ல பையன் மற்றும் கெட்ட பையன் கதை என்றாலும், பாப்லோ எஸ்கோபார் உண்மையில் யார் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்தது என்று கூறலாம்.
டார்க் :
டார்க் தொடருக்கு கிடைத்த அளவு எந்த ஜெர்மன் தொடர்களுக்கும் சர்வதேச அளவில் இவ்வளவு பாராட்டு கிடைக்கவில்லை. சஸ்பென்ஸ் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திருப்பங்களால் நிரம்பிய இந்தத் தொடர், பார்வையாளர்கள் அனைவரையும் அவர்களது இருக்கைகளின் நுனியில் உட்கார வைத்துவிடுகிறது, அந்த அளவிற்கு இந்த தொடர் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது மற்றும் பல இடங்களிலும் இப்படம் குறித்து வாதிடப்பட்டது. இந்தக் கதையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் ஜோனாஸ் பயணம் மேற்கொள்வதன் பின்னணி ஆகும்.
லூபின் :
லூபின் தொடரானது ஒரு திருடனை ஜென்டில்மேனாக சித்தரிக்கும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்தத் தொடர் 1905 ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட ஒரு பிரெஞ்ச் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தக் கதை ஆர்சென் லூபின் என்கிற திருடனைப் பற்றி கூறுவதாக அமைந்துள்ளது, அவர் தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பழிவாங்க முற்படுகிறார். அமெரிக்க நிகழ்ச்சிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த முதல் பிரெஞ்சு நிகழ்ச்சி இந்த லூபின் வெப் தொடராகும்.
மேலும் படிக்க | 'விக்ரம்' படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR