மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளிவரவுள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.  அனிருத் இசையமைக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வெளியாகவுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஒரே நாளில் ரிலீசாகும் சிம்பு மற்றும் தனுஷின் படங்கள்?


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான 'கோப்ரா' படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கிறார்.  விக்ரம் பல வேடங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிகா, மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர் போன்ற பல நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.  இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகவுள்ளது.



அடுத்ததாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.  ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹாம் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.  



அதனையடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'விருமன்' படம் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியாகவுள்ளது.  சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.


மேலும் அனுதீப்.கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியாகவுள்ளது.  இதில் அயல்நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  'எஸ்கே20' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு, சமீபத்தில் தான் 'பிரின்ஸ்' என்று பெயரிடப்பட்டது.



[Source: V2Cinemas]


மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜைவிட அதிக சம்பளம் வாங்கும் நெல்சன் திலீப்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR