அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில் டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த உளவியல் திரில்லராக உருவாகியுள்ள படம் “ஐடென்டிட்டி”. இந்த படத்தை இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 வரும் ஜனவரி 31, 2025 முதல் ZEE5 ஓடிடியில் ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படம் பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அனுராக் கஷ்யப்-வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl படம்! டீசர் வெளியானது..


டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 31 அன்று ZEE5ல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இப்படம், ஆரம்பம் முதலே நம்மை ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் சவாரிக்கு அழைத்துச் செல்கிறது. இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கியுள்ள இந்த உளவியல் த்ரில்லர் ஒரு பிளாக்மெயிலரான அமர் பெலிக்ஸின் கொலையின் மோசமான மர்மத்தை அவிழ்க்கிறது. அந்தக் கொலையை நேரில் பார்த்த, முகங்களை அடையாளம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்ட அலிஷாவை, சிஐ ஆலன் ஜேக்கப் விசாரிக்கிறார்.


அந்த விசாரணை கராத்தே பயிற்றுவிப்பாளரான ஹரன் சங்கரிடம் செல்கிறது. ஆனால் கதை அங்கு முடிவதில்லை. ஹரனும் அலிஷாவும் கொலையின் பின்னணி குறித்த, அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த உண்மைகள் ஒரு பெரிய குற்ற நெட்வொர்க்கை வெளிக்கொண்டு வருகிறது. படம் குறித்து இயக்குநர் அகில் பால் கூறுகையில், “ஐடென்டிட்டி படத்தை உருவாக்கியது, ஒரு மறக்க முடியாத பயணமாகும்.  ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் மனித உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த ஒரு அழுத்தமான கதை.  ஒவ்வொரு திருப்பத்திலும் பார்வையாளர்கள்  யூகிக்க முடியாத, ஒரு உளவியல் த்ரில்லரை உருவாக்க நாங்கள் விரும்பினோம், திரையில் புதிய அனுபவமாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் உள்ள பரந்துபட்ட  பார்வையாளர்களை  இப்பட சென்றடையவுள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படத்தின் திருப்பங்களும் ஆழமும் அதைப் பார்க்கும் அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.


நடிகர் டோவினா தாமஸ் கூறுகையில், "ஐடென்டிட்டி படத்தில் ஒரு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில்  நடித்தது,  எனது கேரியரில் மிகவும் த்ரில்லான மற்றும் சவாலான  அனுபவங்களில் ஒன்றாகும். இந்தத் திரைப்படம் தீவிரமான உணர்ச்சிகள், சிக்கலான உறவுகள் மற்றும் நீதிக்கான இடைவிடாத போராட்டத்தைச் சொல்கிறது.  உணர்வுப்பூர்வமான ஒரு அழுத்தமான திரில்லர் கதையில், நானும் ஒரு பங்காக இருந்தது மகிழ்ச்சி. ZEE5  மூலம், பார்வையாளர்கள் "ஐடெண்டிடி" படத்தின், அட்டகாசமான திருப்பங்களுடன் கூடிய, இந்த உளவியல் திரில்லரைக் கண்டு களிப்பதைக் காண ஆவலாக உள்ளேன்" என்று கூறினார்.


நடிகை திரிஷா கிருஷ்ணன் பேசுகையில், “ஐடென்டிட்டி என்பது வெறும் த்ரில்லர் அல்ல; இது மனித இயல்பினை, இருண்ட மனங்களை ஆராயும் கதையாகும், அதே நேரத்தில் இது பார்வையாளர்களை அதன் எதிர்பாராத திருப்பங்களுடன் கவர்ந்திழுக்கிறது. கதையின் ஆழமும் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும் தான் என்னை இந்த திரைப்படத்தை நோக்கி உண்மையிலேயே ஈர்த்தது. திறமையான நடிகர்களுடன், மிகச்சிறந்த இயக்குநர்களின் கீழ் பணியாற்றியது, ஒரு ஆக்கப்பூர்வமாக நிறைவான பயணமாக இருந்தது.  இப்படம் உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களுக்குச் செல்லவுள்ளது மகிழ்ச்சி" என்று கூறினார்.


மேலும் படிக்க | “சாதிய படங்கள் தேவையற்றது” கெளதம் மேனன் பேச்சால் எழுந்த சர்ச்சை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ