முதல்முறையாக மலையாளப் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. ஆனால் மலையாளப்படத்த்தில் நடிக்க இதுவரை நடிக்க வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. ஷ்யாமபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் அடுத்த வருடம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. எனவே அடுத்த வருடம் முதல் த்ரிஷா மலையாளப் படத்தின் படபிடிப்பில் கலந்த்து கொள்ளார்.


 மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அது அடுத்த வருடம் நிறைவேறப் போகிறது.