சமீபத்தில் எஸ்கே (Chennai Super King) அணி கேப்டன் தோனியின் (Mahendra Singh Dhoni) மகளுக்கும் சமூக வலைதளத்தில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டான். தற்போது, சமூக ஊடகங்களின் இந்த அசிங்கமான பக்கம் மீண்டும் ஒரு முறை வளர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கபபட்டு உள்ளது. மேலும் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 


ALSO READ | “நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கைக்கு விஜய் சேதுபதியின் பதில்


முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற திரைப்படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பதற்காக அறிவிப்பு வெளியானது முதல் அந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என அவருக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திரைப்படம் குறித்து சர்ச்சைகள் எழும்பி வருகிறது.


இலங்கையில் நடந்த போரின் போது, ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் முரளிதரன் எனக் கூறி, அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதி ராஜா உள்பட பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் வலியுறுத்தி வந்தனர்.


அதேவேளையில், ஒரு நடிகர் என்ன வேடத்தில் நடிக்கலாம் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக் கூடாது என்று பலரும் கருத்து தெரி வித்திருந்தனர். 


இந்நிலையில் இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் நபர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் பிரபலங்களின் வாரிசுகளுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பெருகி வருகிறது. 


 


ALSO READ | ‘தமிழினத் துரோகி" முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது: வைகோ கோரிக்கை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR