ஷங்கரின் பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ளது 2.0!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட செல்போன்களே அவர்களுக்கு எதிரியாக நின்றால் என்னவாகும் என்ற கதை கருவினை கையில் கொண்டு தனக்குறிய தனி ஸ்டைலில் ரசிகர்களை அசர வைத்திருக்கின்றார் ஷங்கர்.


ஒரு பாதி வில்லத்தனம், மறுபாதி நல்லத்தனம்... என மாஸ் காட்டும் 2.0. படத்தின் கதையினை பற்றி நாம் பேசபோவதில்லை விடுங்கள். ஏனெனில் அதை திரையில் பார்த்தால் மட்டுமே நம்மால் உணர முடியும்.


ஆனால் திரையில் பார்த்தவர்களின், பார்க்க வந்தவர்களின் உணர்வுகளை பார்க்கலாமே....









கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், முதல் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகளிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.


இத்திரைப்படத்திற்கு 3D VFX தொழில்நுட்பங்களுக்காக மட்டும் சுமார் 75 மில்லியன் டாலர்களை செலவழிக்கப்பட்டுள்ளது, அதாவது ரூ.543 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றது.