ஸ்ரீதேவி உடலுக்கு 2ம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை- துபாய் ஊடகம்
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபையில் நடந்த உறவினர் மோஹித் மார்வா இல்லத் திருமண விழாவுக்குச் சென்றிருந்தனர். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகம்.
திருமண நிகழ்ச்சி முடிந்து, ஹோட்டல் அறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. துபை நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை சாண்டாகுரூஸ் பகுதியில் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீதேவி உடலுக்கு 2ம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை என்று தடயவியல் துறை முடிவு செய்துள்ளதாக துபாய் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதேப் பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அடுத்தக்கட்ட நடைமுறைகள் அனைத்தும் தாமதமாகியுள்ளன.