Dhruv Vikram Got Golden Visa For UAE Countries:  கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் அந்நாட்டு பிரஜை போல வாழ்வதுடன், அங்கேயே தங்கி படிக்கலாம். அங்கேயே பணியும் புரியலாம். அத்துடன் வியாபாரங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு நாடு தெரிவித்துள்ளது


மேலும் படிக்க | Valentines Day 2024: ‘காதல் கண்கட்டுதே..’ காதலித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்!


இந்த நிலையில் நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமாக இருக்கக்கூடிய துருவ் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருக்கிறது ஐக்கிய அரபு நாடு. 


துபாய் சென்ற நடிகர் துருவ் விக்ரம் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் புகழ்பெற்ற வணிக அமைப்பு நிறுவனமான ஜேபிஎஸ் நிறுவனத்தினர் வரவேற்பு அளிக்கப்பட்டு துருவ் விக்ரமுக்கு யுஏஇ விசாவை வழங்கினர்


ஏற்கனவே நடிகர் கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கிய நிலையில் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுக்கு வழங்கப்பட்டது


முன்னதாக இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அமெரிக்க டிவி ஷோவில் ஒளித்த விஜய்யின் “நான் ரெடி” பாடல்-வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ