கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.  இதனால் நீண்ட நாட்களாக திரைக்கு வர தயாராக இருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கொரோனா அலையின் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டதிலிருந்து  பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் சில பட நிறுவனங்கள் தங்களது படங்களை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என்று குறிக்கோளில் உள்ளனர். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் தமிழில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சுருதிஹாசன் நடித்த லாபம் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.  இப்படத்தினை ஓடிடியில் வெளியிடலாம் என்று முடிவு எடுத்த நிலையில் விஜய் சேதுபதியின் வேண்டுகோளுக்கிணங்க இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமான தலைவி செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் திரையரங்கில் வெளியாக உள்ளது.  திரையரங்கில் வெளியாகி 15வது நாளில் ஓடிடியில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியே வந்தவுடன் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கூறியதை அடுத்து, 30 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடுவோம் என்று படைத்தரப்பு உறுதி அளித்ததன் மூலம் தற்போது இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. 


செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் , ராம்பாலா சிவா கூட்டணியில் உருவான இடியட் மற்றும் ஹர்பஜன் சிங் - சதீஷ் நடிக்கும் பிரண்ட்ஷிப் படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.  அதற்கு அடுத்த வாரம் செப்டம்பர் 24ஆம் தேதி ரியோ ராஜ் நடித்த பிளான் பண்ணி பண்றோம் திரைப்படமும், செப்டம்பர் 30ஆம் தேதி ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம்,நடிப்பு, இசையில் உருவாகும் சிவகுமாரின் சபதம் திரைப்படம் வெளிவர உள்ளது.  மேலும் செப்டம்பர் 10-ஆம் தேதி சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.  அதனை தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் சேதுபதியின் அனாபெல் சேதுபதி படம் ஓடிடியில் வெளியாகிறது. 


தற்போது திரையரங்குகள் திறந்து நிறைய படங்கள் வெளியாவதற்கு அறிவிப்புகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் திரையரங்கு சென்று படங்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது வரவில்லை.  கொரோனா முதல் அலை முடிந்து திரையரங்கு திறக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் மக்கள் திரையரங்குகள் மீது விருப்பம் காட்டவில்லை. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியான பிறகு மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி படை எடுத்தது. அந்த வகையில் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வருவார்கள் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR