சூர்யா, விஜய்குமார் கூட்டட்னியில் மீண்டும் வலம்வருகிறது உறியடி-2. இன்று மோஷன் போஸ்டர் வெளியீடு..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’ திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. விஜய்குமார் தயாரித்து, பின்னணி இசையமைத்து, எழுதி, இயக்கி, ஹீரோவாக அறிமுகமான இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை. என்றாலும் மானே.... மானே....(ரப்பர் இருக்க) பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவி நல்ல வரவேற்ப்பை பெற்றது. 


ஆனால், விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பா கம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனை பிரபல நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவுள்ளார். இதிலும் விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து, இயக்கவுள்ளாராம். இதில் விஜயகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகி விஸ்மயா நடிக்கிறார். 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர், 'உறியடி' ஷங்கர்தாஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். '96' படத்தின் தன் இசையால் அனைவரையும் கவர்ந்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 


மக்களுக்குத் தேவையான சோஷியல் மெசேஜுடன் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் மோசன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.