உத்கல் ரயில் விபத்து: கமல்ஹாசன் இரங்கல்!
உத்தரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ள குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்த்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தற்போதும் மீட்புக் குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 72 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்து அறிந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.