Vaibhavi Upadhyay: விபத்தில் உயிரிழந்த தீபிகா படுகோன் பட நடிகை..அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்..!
Vaibhavi Upadhyay Passes Away: சாராபாய் vs.சாராபாய் எனும் பிரபலமான இந்தி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வைபவி வைபவி உபாத்யாய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தி மொழியில் மிகவும் பிரபலமாக விளங்கும் தொடர், சாராபாய் vs.சாராபாய். இதில், ஜாஸ்மின் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, வைபவி உபாத்யாய். இவர், இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகை:
இந்தி மொழியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த தொடர், சாராபாய் vs.சாராபாய். இந்த தொடரில் ஜாஸ்மினாக வந்து பலரையும் கவர்ந்தவர் வைபவி உபாத்யாய். அந்த தொடர் மட்டுமன்றி இன்னும் பல பிரபலமான தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். தீபிகா படுகோன் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சபக் படத்திலும் மீனாட்சி எனும் முக்கிய கதாப்பாத்திரமாக இவர் நடித்துள்ளார்.
சாலை விபத்து:
நடிகை வைபவிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. வைபவிக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் பிடித்த ஹாபி. இதனால் இவர் தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து ஒரு நாள் இவர்கள் காரில் சென்று கொண்டு இருக்கையில் இருவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். இதில், இவர்களது வண்டி பெரும் பள்ளத்தாக்கிற்குள் விழுந்துள்ளது. இதில், நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 'RRR' படத்தில் நடித்த ரே ஸ்டீவன்சன் காலமானார்
இறுதி சடங்கு:
விபத்தையடுத்து, நேற்று வைபவி உயிரிழந்துள்ளார். இதைக்கேட்ட அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வைபவியின் உறவினர்கள் சண்டிகரில் உள்ளனர். அதனால், அவரது உடல் சண்டிகருக்கு எடுத்து வரப்பட்டது. இவருக்கான இறுதி சடங்கு இன்று காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
பிரபலங்கள் இரங்கல்:
பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விளங்கும் டிஜே மஜேத்தியா நடிகையின் இறப்பிற்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. மிகவும் நல்ல நடிகையாகவும் தோழியாகவும் இருந்த சாராபாய் vs.சாராபாய் நடிகை ஜாஸ்மின் உயிரிழந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடைக..” என கண்ணீர் பதிவை வெளியிட்டுள்ளார். பிரபல இந்தி சீரியல் நடிகை ரூபாலி கங்குலி வைபவியின் சிறந்த தோழி ஆவார். அவரும் “சீக்கிரம் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டாய்..” என அவருக்காக பதிவினை வெளியிட்டுள்ளார்.
வைபவியின் கடைசி பதிவு:
வைபவி தனது இன்ஸ்டா பக்கத்தில் மே 6ஆம் தேதியன்று ஒரு ரீல்ஸ் வீடியோவினை பதிவிட்டிருந்தார். அதில், அவர் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்ட போது எடுத்த சிறு சிறு வீடியோக்களின் தொகுப்பு இருந்தது. இதைப்பகிர்ந்த அவர், இயற்கை குறித்தும் அது நம் உடல் நலனில் ஏற்படுத்தும் நலன்கள் குறித்தும் சிறிய குறிப்பினை எழுதியிருந்தார். மேலும், “நமக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்..” என நீண்ட பத்தியாக குறிப்பிட்டிருந்தார். இப்போது அவர் உயிரிழந்த செய்தியை அறிந்தவுடன் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் அந்த பதிவிற்கு கீழ், “Rest in Peace, Gone too soon, Still cannot believe it” போன்ற வாசகங்களை கமெண்ட் செய்து வருகின்றனர். இவரது இறப்பு வட இந்தியாவின் சின்னத்திரை மட்டுமன்றி வெள்ளித்திரையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ