நீண்ட எதிர்ப்பார்ப்பிற்கு பிறகு வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கடைசியாக அஜித்திற்கு 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் படம் திரையரங்கில் வெளியானது, அதன் பிறகு வெளிவரும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் இப்படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்ம் வெளிவராமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ”உருவ கேலி பாடமெடுக்கும் வெண்ணைகளுக்கு” : புளு சட்டை மாறன் தாக்கு


அரசியல் பிரபலங்கள் தொடங்கி, கிரிக்கெட் பிரபலங்கள் வரை எங்கு திரும்பினாலும் வலிமை அப்டேட் என்று கேட்டுக் அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர். பின்பு ஒருவழியாக படம் வெளியாகி அஜித் ரசிகர்கள் கொண்டாடினாலும், ஜெனரல் ஆடயன்ஸ் பக்கம் இருந்து வலிமை படம் நன்றாக இல்லை என்ற கருத்து எழுந்தது. இப்படத்தின் மீது பல தரப்பட்ட விமர்சனங்களை வைத்து வந்தனர். படம்  முழுக்க சேசிங் சீன்களாக உள்ளது, கதையில் சென்டிமென்ட் காட்சிகள் எடுபடவில்லை போன்ற  கருத்துக்கள் அதிகப்படியாக இருந்தன.   



இன்னிலையில் வலிமை படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட கட்சி ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  வலிமை படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தின் குடும்பத்தினரை வில்லன் ஒரு பில்டிங்கில் கட்டி தொங்க விட்டிருப்பார். அதேபோன்று 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜாக்கிசான் போலீஸ் ஸ்டோரி படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. அப்படத்தில் ஜாக்கிசானின் உடன் இருந்தவர்களை வில்லன் கட்டி தொங்க விட்டிருப்பார். இரண்டு வீடியோக்களும் கிட்டத்தட்ட ஒரே போல் இருக்கிறது என்றும்,  இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து இணைத்து, காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.  இதுகுறித்து படக் குழுவில் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.


 



மேலும் படிக்க | அஜித் அரசியலுக்கு வர தயாராகிறார் - ஜெயலலிதாவின் உதவியாளர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR