”உருவ கேலி பாடமெடுக்கும் வெண்ணைகளுக்கு” : புளு சட்டை மாறன் தாக்கு

வலிமை விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் செய்தவர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடிகொடுத்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 11:55 AM IST
  • உருவ கேலி செய்த ப்ளூ சட்டை மாறன்
  • அஜித் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு
  • விமர்சனங்களுக்கு மாறன் பதிலடி
”உருவ கேலி பாடமெடுக்கும் வெண்ணைகளுக்கு” : புளு சட்டை மாறன் தாக்கு title=

நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பிற்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி திரையரங்கில் வெளியானது.  இப்படத்திற்கு நெகடிவ், பாசிட்டிவ் என இரண்டு விமர்சனங்களும் வந்தது.  மூவி ரெவியூர் ப்ளூ சட்டை மாறன் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கொடுத்தார்.  அதுமட்டுமில்லாமல் அஜித்தை உருவ கேலியும் செய்திருந்தார்.  இது அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.  தொடர்ந்து இணையத்தில் அவரை தாக்கி பதிவிட்டு வந்தனர்.  சில பிரபலங்களும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

மேலும் படிக்க | அஜித்துக்கு அரசியல் எண்ணம் இல்லை - சுரேஷ் சந்திரா விளக்கம்

இந்நிலையில் தனக்கு வந்த எதிர்விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், " பாடி சேமிங் பாடமெடுக்கும் பிரபலங்கள் மற்றும் மற்றவர்களுக்கு, ரெட் படத்தில் வரும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடலில் ஸ்லிம்மான இருக்கும்  கதாநாயகியைப் பார்த்து அஜித் பாடுவது என்ன ராகம்? மெல்லிய தேகக்காரி, ஸ்லிம்மான உடம்புகாரி  என்று வர்ணிக்காமல் ஒல்லிக்குச்சி, குண்டு என்று பிறரின் உருவத்தை கேலி செய்யும் வரிகள் கொண்ட பாடலை பாடியபோது நீங்கள் எங்கே சென்றீர்கள்?

Charlie Chaplin team complaints against BlueSattai review - Charlie Chaplin  2- BlueSattai- Maran- Sakthi Chidambaram | Thandoratimes.com |

இதே பாடலில், நான் சமைஞ்சதும் சாமி வந்து உன் காதில் சொல்லுச்சுதானே? எனும் வரியும் உண்டு. நாம் வணங்கும் சாமிக்கு இதுதான் வேலையா? மேலும் சில ஆபாச வரிகள்.. "பழுத்தாச்சி, நெஞ்சம் பழம் பழுத்தாச்சு, அணில் கிட்ட கொடுத்தாச்சி, அணில் இப்ப துள்ளலாம், அப்பப்ப பல்லும் பதிக்கலாம்.." பெண்களின் மார்பகத்தை காமவெறியுடன் பார்ப்பவன் கண்ணிற்கு மட்டுமே இப்படி எழுத தோன்றும், அதில் நடிக்க தோன்றும். இது வெறும் கற்பனை பாடல் அல்ல, ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. ஆகவே உருவ கேலி பாடமெடுக்கும் வெண்ணைகள்.. திராணி இருந்தால் இப்படி கொச்சையாக பாடல், வசனம் எழுதுவோர் மற்றும் அதில் நடிப்போரையும் கண்டியுங்கள். இல்லாவிட்டால் மூடிக்கொண்டு இருங்கள்"  என்று கூறியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

 

மேலும் படிக்க | வலிமை படத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News