’தியேட்டர் திருவிழா’ அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ள 6 மெகா பட்ஜெட் திரைப்படங்கள்
அடுத்த 2 மாதங்களில் மட்டும் வலிமை, ஆர்.ஆர்.ஆர் என 6 மெகா பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன.
கொரோனா 3வது அலை பரவலால் பொங்கல் ரிலீஸாக இருந்த மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களான வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தற்காலிகாக ஒத்திவைக்கப்பட்டது. பொங்கல் ரிலீஸாக இந்த திரைப்படங்ஙள் திரைக்கு வரும் என காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்புக்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டது.
ALSO READ | அஜித் மனைவி பெயரில் போலி டிவிட்டர் கணக்கு..!
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொரோனா 3வது அலையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், கோவில்களில் பக்தர்கள் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தியேட்டர், மக்கள் அதிகம் கூடும் துணிக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தியேட்டர்களில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பு விரைவிலை வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனையொட்டி வலிமை முதல் ஆர்.ஆர்.ஆர் வரை என மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடித்து தயாரித்திருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாகிறது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸாகிறது.
ALSO READ | ALSO READ | வலிமை வைரலாகும் 'மனசு வலிக்குது' போஸ்டர்!!
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 ஆம் தேதியும், ராதேஷ்யாம் மார்ச் 11 ஆம் தேதியும் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டான் திரைப்படங்கள் மார்ச் 25 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன. மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளதால், தியேட்டர்களில் அடுத்த 2 மாதங்கள் திருவிழா கொண்டாட்டம் களைகட்ட உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR