தல அஜித் பொது இடங்களில் அதிகம் காணப்படுவது இல்லை, சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதில்லை. எனினும், அவரைப் பற்றிய செய்திகள் அவரது ரசிகர்களை அவ்வப்போது உற்சாகத்தில் ஆழ்த்தி வருவதும் வழக்கமான விஷயம்தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது பெயரும் படங்களும் ஒவ்வொரு நாளும் டிரெண்ட் ஆவதை நாம் காண்கிறோம். ’வலிமை அப்டேட்’-தான் ட்விட்டர் (Twitter) மற்றும் பிற செய்தி அடிப்படையிலான தளங்களில் அதிகம் தேடப்பட்ட விஷயமாகும். தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் பற்றி அரசியல் பேரணிகள் மற்றும் உலகெங்கிலும் கிரிக்கெட் போட்டிகளில்கூட கேட்கத் தவறுவதில்லை.


'வலிமை அப்டேட்’-ஐப் பொறுத்தவரை தல அஜித் (Ajith) ரசிகர்களுக்கு ஒன்றல்ல, இரட்டை விருந்து காத்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 1 ஆம் தேதி வடிவமைக்கப்பட்டது. மாஸ் ஹீரோ அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியிடும் நோக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டது. ஆனால் சமூக உணர்வு அதிகமாக உள்ள அஜித், மக்கள் COVID 19 தொற்று நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை அப்போது வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


ALSO READ: Viral Video: WTC பைனல்ஸில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்


'வலிமை’ குழு ஒரு அதிரடியான மோஷன் போஸ்டரையும் வடிவமைத்துள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரைத் (First Look Poster) தொடர்ந்து வெளியிடப்படும். இதன் மூலம் இத்தனை நாட்களாக ஒரு அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகின்றது. 


இந்த போஸ்டர்களில் படத்தின் ரிலீஸ் தேதியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக இணையத்தை கலக்கும் என்பதில் சந்தேகமில்லை.


எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், நீரவ் ஷா கேமராவை கையாளுகிறார். இப்படத்தில் அஜித் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாகவும், யோகி பாபு நகைச்சுவை வேடத்திலும் நடிக்கின்றனர்.


ALSO READ: வலிமை திரைப்படம் குறித்த தரமான அப்டேட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR