தமிழ் சினிமா செய்திகள்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை சீரியல்கள், படங்கள் என பிஸியாகிவிட்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதோடு சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போதும் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார், சக பிரபலங்களை கலாய்த்தும் ட்ரெண்ட் ஆவார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பால் என்பவருடன் 3-வது திருமணம் நடைபெற்றது. ஆனால் அதில் எக்கச்சக்க குழப்பங்கள் நீடித்தது. பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பை கிளப்பினார்.


மேலும் படிக்க - ‘மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுக்க பார்த்தார்’ பிரபல நடிகை பகிர்ந்த ‘பகீர்’ அனுபவம்..!


ஆனாலும் பீட்டர் பால் மீதான காதலால் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் வனிதா. இந்த திருமணம் ஒருசில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு சமீபத்தில் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தச்சூழலில் வனிதா விஜயகுமார் மீண்டும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரவியது. 


அதாவது பேட்டி ஒன்றில், தனக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளதாகவும், சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் மட்டும் தான் இருக்கும் எனவும், அதனால் விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லை எனவும் வனிதா விஜயகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


மேலும் படிக்க - இலியானா குழந்தைக்கு இவர்தானா தந்தை? பெரிய ட்விஸ்டுடன் போட்டோவை பதிவிட்ட நடிகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ