பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் 'வாரிசு' படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தை திரையில் காண வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேக்கவே பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதியான இன்றைய தினம் மாலை 4 மணியளவில் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.  ஏற்கனவே விஜய் சொன்ன ஒரு குட்டி ஸ்டோரிக்கு விஷுவல் எஃபெக்ட் கொடுத்து ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங்கானது.


மேலும் படிக்க | வாரிசு படத்தில் இத்தனை பாடல்களா? வெளியானது டிராக் லிஸ்ட்!



இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் படையெடுத்து நேரு அரங்கில் குவிந்துள்ள நிலையில், பலரும் டிக்கெட் கிடைக்காமல் அரங்குக்கு வெளியேவும் கால் வலிக்க காத்திருக்கின்றனர். சுமார் 40 ஆயிரம் அமரும் வசதி கொண்ட நேரு உள்விளையாட்டு அரங்கில், ரசிகர்கள் மட்டுமின்றி, படக்குழு, திரையுலக பிரபலங்கள், பெரும் புள்ளிகளும் கலந்துகொள்கின்றனர். 



அந்த வகையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரபலங்களும் வரத்தொடங்கியுள்ளனர். தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட படக்குழுவினரும் அரங்குகிற்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் நிகழ்விற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாள்களாக எஸ்ஏசி - விஜய் இடையே சில பிரச்னைகள் நிலவி வந்த நிலையில், இருவருக்கு இடையிலும் பேச்சுவார்த்தையும் குறைந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன. 


மேலும் படிக்க | வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ