சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளிவரும் திரைப்படம் வேலைக்காரன். இப்படத்தின் "எழு வேலைகாரா" பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியிட்ட 24 மணிநேரத்திற்குள் 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வெற்றிகரமாக வளம் வருகிறது இப்பாடல்!


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 


ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 


சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. 



முன்னதாக கடந்த டிச.,3-ஆம் நாள் இப்படத்தின் இசை வெளியானது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் "எழு வேலைகாரா" பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்