வேந்தர் மூவிஸ் மதன் கைது!!
திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் வசூலித்த பணத்தை கொடுத்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்.
சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக 80 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு.
இவ்வழக்கில் மதனை கைது செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்தது. இந்நிலையில் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதனை சென்னை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னை கொண்டு வந்த பிறகு, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்படும் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.