சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் அவரது கம்பேக் படமாகவே பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து சிம்பு மீண்டும் பிஸியாக நடித்துவருகிறார். அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கௌதம் கார்த்திக்குடன் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.



இதில் வெந்து தணிந்தது காடு எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


மேலும் படிக்க | ஆட்டோ டிரைவர் ஆன சிம்பு - இணையத்தில் வைரல்


சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிம்பு படு எனர்ஜியாக இருப்பதாகவும், கௌதம் - சிம்பு காம்போவில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் போல் இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.



இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்துக்குள் முடிவடைய இருப்பதாகவும், படத்துக்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பம் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ராம் - நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR