சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிம்பு மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் இயக்குநர் கௌதம் மேனனுடன் சிம்பு மீண்டும் இணைந்துள்ளார். தற்போது சிம்புவும், கௌதமும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். அப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 



சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் 14ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு கடந்த 12ஆம் தேதி வெளியிட்டது.


 



இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரே எழுதியிருக்கும் இப்பாடலை பாடலாசிரியை தாமரை எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்துவருகிறது.


மேலும் படிக்க | நா. முத்துக்குமார் பெயரை சொன்னால் உள் நெஞ்சில் கொண்டாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ