சீதா ராமம் படத்தை அனைவரும் பாருங்கள் - வெங்கையா நாயுடு புகழாரம்
சீதா ராமம் படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டுமென்று முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் திரையரங்குக்கு குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி பல நாள்கள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை சீதாராமம் தருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | தனுஷ் ரசிகர்கள் அட்டகாசம் - பிரபல தியேட்டர் ஸ்கிரீன் கிழிப்பு
இந்நிலையில் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சீதா ராமம் படத்தை புகழ்ந்துள்ளார். படம் குறித்து வெங்கையா தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில், ஒரு அழகான காட்சி உருவாகியுள்ளது. எளிமையான காதல் கதையைப்போல் இல்லாமல் , வீரமிக்க சிப்பாய் பின்னணியுடன், பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் சீதா ராமம் படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது சீதா ராமம். போர் சத்தம் எதுவுமின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை காட்சிப்படுத்தியதற்கு இயக்குநர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினி தத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ