பிரேம் ஜியின்'சத்திய சோதனை' படத்தின் ட்ரைலர்: நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். லேட்டஸ்டாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். பார்ப்பதற்கே அப்பாவி போல இருக்கும் இவர் தான் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி, எப்போதும் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொள்ளும் பிரேம்ஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவரின் திருட்டு முழிக்கே பல ரசிகர்கள் உண்டு. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா...என்ன கொடுமை சார் இதெல்லாம்... என ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது வசனத்தை சொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் வெறும் ஸைட் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த நடிகர் பிரேம்ஜி, தற்போது 'சத்திய சோதனை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில ஸ்வயம் சித்தா, ரேஷ்மா பசுபுலேட்டி, கே.ஜி. மோகன், செல்வ முருகன், லட்சுமி, ஹரிதா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் சத்திய சோதனை படத்திற்கு ரகுராம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சரணும், படத்தொகுப்பாளராக வெங்கட் ராஜெனும் பணியாற்றியுள்ளனர். 


மேலும் படிக்க | லியோ படத்தின் தொடர்புடன் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம்!


இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி வெளியாகயுள்து. இதனிடையே  கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி சத்திய சோதனை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.





அதில் பொதுவுடைமை மற்றும் தனியுடைமை பற்றி பேசும் காட்சிகள் வரவேற்பை பெற்றது. எதேர்ச்சியாக போகுற வழியில் கொலை நடந்ததை பற்றி, இவர் தகவல் கூற, போலீசார் இவர் தான் கொலை செய்தார் என பிடித்து வைத்து கொண்டு வளைய வளைய விசாரணை செய்கிறார்கள். கடைசியில் உண்மையான கொலைகாரன் எப்படி சிக்குகிறான் என்பதை காமெடியான கதைக்களத்துடன் கூறியுள்ளது இந்த திரைப்படம். 


மேலும் படிக்க | சினிமாவுக்கு குட்-பை சொல்லும் சமந்தா? RRR பார்ட் 2 அப்டேட்-இன்றைய சினிமா செய்திகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ