பிரபல நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா இன்று காலமானார்!
நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா உடல் நலகுறைவால் இன்று உயிரிழந்தார்.
நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா உடல் நலகுறைவால் இன்று உயிரிழந்தார்.
விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தால் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் டி.எஸ்.ராகவேந்திரா. அதன்பின் சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எஸ்.ராகவேந்திரா இன்று மரணமடைந்தார்.
இறுதிச்சடங்குகள் இன்று மதியம் கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது