சிம்பு - நெல்சன் கூட்டணியில் புத்துயிர் பெறும் பழைய படம்?
![சிம்பு - நெல்சன் கூட்டணியில் புத்துயிர் பெறும் பழைய படம்? சிம்பு - நெல்சன் கூட்டணியில் புத்துயிர் பெறும் பழைய படம்?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/03/06/214460-simbu-nelson.jpg?itok=TqIuVfvB)
சிம்பு - நெல்சன் கூட்டணியில் ஏற்கனவே தொடங்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள படத்தை மீண்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர்.
மூன்று படங்களில் தமிழின் முன்னணி இயக்குநாராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இவருடைய ஆரம்பம் சிம்புவுடன் ’வேட்டை மன்னன்’ படத்தில் தொடங்கினாலும், அந்தப் படம் முழுமையாக எடுக்கப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது. அடுத்ததாக நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த நெல்சனுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘கோலமாவு கோகிலா’ அவர் இயக்கிய முதல் திரைப்படம்.
மேலும் படிக்க | ரஜினிக்காக 2 மிகப்பெரிய படங்களை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்..!
இப்படம் வசூல் ரீதியாகவும், விம்ரசன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டானதால் அடுத்ததாக அவருடைய நண்பர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். அவர்கள் கூட்டணியில் உருவான படம் ‘டாக்டர்’. இந்தப் படம் கொரோனா லாக்டவுனில் தியேட்டரில் ரிலீஸாகி வசூலில் பிளாக் பஸ்டர் அடித்தது. அடுத்து யாரை இயக்கப்போகிறார்? என எதிர்பார்த்த நிலையில், இளைய தளபதி விஜயுடன் கைகோர்த்தார் நெல்சன் திலீப்குமார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் - விஜய் கூட்டணியில் விரைவில் ரீலிஸாக இருக்கிறது பீஸ்ட். ஏப்ரல் 14 ஆம் தேதி பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை ரஜினிகாந்தை அவர் இயக்குகிறார்.
4வது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பெற்றுள்ள அவர், தமிழ் திரையுலகின் ஸ்டார் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் படத்துக்குப் பிறகு முதன்முதலாக கைவிடப்பட்ட படமான ‘வேட்டை மன்னன்’ படத்தை நெல்சன் இயக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சிம்புவும் ‘மாநாடு’ மூலம் கம்பேக் கொடுத்து உட்சத்தில் இருப்பதால், இப்படத்துக்கு புத்துயிர் கொடுக்க முடிவெடுத்துள்ளார் தயாரிப்பாளர் நிக்ஸ் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இது குறித்து அவர் பேசும்போது, "வேட்டை மன்னன் படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் அப்போது அதனை கைவிட்டோம். இப்போது மீண்டும் அப்படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களின் அப்டேட்களை அள்ளி தெறிக்கவிட்ட ஜி.வி பிரகாஷ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR