ஒரு காலத்தில் நடிகைகளின் நடனத்தை சினிமாவில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது, சமூக ஊடங்களில் மூலமாகவும் பார்க்க முடிகிறது. அப்படி, நடிகை அடா சர்மா, தான் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை Instagram-ல் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை ஆதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "இது நம்ம ஆளு" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். 2015-ம் ஆண்டு "ரானா விக்ரம்" என்ற கன்னட படத்தில் நடித்தார். ஐந்துக்கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.


இவர் இந்தியில் "1920" மற்றும் "கமாண்டோ 2" படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பல பதிவுகள் பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், அவர் தான் இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.