வலிமை படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் இந்த கூட்டணி ஏகே61 படத்தின் மூலம் இணைந்துள்ளது.  அஜித்தை வைத்து வினோத் இயக்கும் இந்த ஏகே61 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.  வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதேபோன்று ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' படத்தில் அஜீத் பணத்தை கொள்ளை அடிப்பவராக நடித்திருந்தார்.  மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஏகே61 படத்தில் அஜித் நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அஜித் - விக்னேஷ் சிவன் படத்தில் விஜய்சேதுபதி?


ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே62' படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,  இதுவரை அஜித் நடித்திராத அளவில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் இப்படம் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில் வாலி படத்தில் அஜித்தின் நடிப்பு சிறப்பாக இல்லையென்றால் நிச்சயம் அப்படம் வெற்றி பெற்றிருக்காது, அந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.  பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தான் வாலி படத்தை இயக்கினார்.  இந்த படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடைப்போட்டது.



மேலும் 'ஏகே62' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.  படத்தின் படப்பிடிப்பு, படத்தில் நடிக்கப்போகும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரது நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | மீண்டும் ஓர் ஏழாம் அறிவு! கலக்கப்போகும் நடிகர் சூர்யா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR