தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நயன் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார். இருப்பினும் தன்னம்பிக்கைக்கும் தீவிர உழைப்புக்கும் அடையாளமாக திகழ்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது போராட்ட குணத்திற்காகவே பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதற்கு தகுந்தவாறு கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார்.


இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது. நீண்ட நாள்கள் ஒன்றாக இருந்த இருவருக்கும் இன்று திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.



அதன்படி நயன்தாராவுக்கும்,விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இன்று கோலாகலமாக திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக் கான், போனி கபூர், மணிரத்னம், அட்லீ, கே.எஸ். ரவிக்குமார், ஹரி, சிவா, சூர்யா, கார்த்தி, ஷாலினி என கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள்வரை பலர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை இருவருக்கும் கூறிவருகின்றனர். 


மேலும் படிக்க | நயன் - விக்கி திருமணத்தை கவுதம் மேனன் இயக்குவது உண்மையா?


இதற்கிடையே இருவரும் தங்களது திருமணத்தை முன்னிட்டு ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மணக்கோலத்துடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


 



மேலும் அந்தப் புகைப்படத்துடன், “கடவுள், பிரபஞ்சம், பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படத்தை பலரும் பகிர்ந்துவருவதால் அது வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | நயன்தாரா திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளாதது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR