நயன்தாரா திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளாதது ஏன்?

நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணத்தில் நடிகை சமந்தா கலந்து கொள்ளாதது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 9, 2022, 12:30 PM IST
  • விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம்
  • மகாபலிபுரத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்றது
  • நெருங்கிய தோழியான சமந்தா கலந்து கொள்ளவில்லை
நயன்தாரா திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளாதது ஏன்? title=

நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் திருமணம் சென்னை அருகே இருக்கும் மகாபலிபுரத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாலிவுட் முதல் கோலிவுட் ஸ்டார்கள் வரை இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதிகளை மனதார வாழ்த்தியுள்ளனர். பாலிவுட் மெகா ஸ்டாரான ஷாரூக்கான், அவரது மனைவியுடன் நேரில் வந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியை வாழ்த்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார் மற்றும் ராதிகா, இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் நட்சத்திர தம்பதியினரின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | காதல் முதல் கல்யாணம் வரை..நயன் - விக்கியின் அழகான பயணம்!

இவர்களைத் தவிர கோலிவுட், டோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் அனைவருக்கும் திருமண விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மகாபலிபுரத்துக்கு வருகை தந்து கொண்டிருப்பதால் திரையுலகின் பார்வை முழுவதும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் மகாபலிபுரத்தை நோக்கியே உள்ளது. பிரபலங்களின் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நயன்தாராவின் நெருங்கிய தோழியான சமந்தா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அண்மையில் இவர்களது கூட்டணியில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். காரணம் என்ன? என விசாரித்தபோது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ’குஷி’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் சமந்தா. படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டில் இருக்கும் சமந்தா, திருமணத்துக்கு வர முடியவில்லையாம். அதேநேரத்தில் சூட்டிங் முடிந்ததும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியை நேரில் வாழ்த்த இருக்கிறாராம். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரபலங்களும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க | மீண்டும் ஒரே படத்தில் இணையும் நயன்தாரா மற்றும் சமந்தா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News